தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பருப்பு ஆலையில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான இயந்திரம் திருட்டு

விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் சிவசிதம்பரம்(45). இவர் இப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பருப்பு அரவை செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் சனிக்கிழமை

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பருப்பு அரவை தொழிற்சாலையில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான இயந்திரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் சிவசிதம்பரம்(45). இவர் இப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பருப்பு அரவை செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் சனிக்கிழமை வழக்கம் போல் செயல்பட்ட நிலையில் மாலையில் பணிகள் முடிந்ததும் தொழிலாளர்கள் பூட்டி விட்டு உரிமையாளரிடம் சாவியை கொடுத்து விட்டு சென்றார்களாம்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் சிவசிதம்பரம் தொழிற்சாலைக்கு வந்து பார்க்கையில் கேட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தாராம். அதையடுத்து, உள்ளே சென்று பார்க்கையில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் நவீன பருப்பு அரவை இயந்திர பாகங்களை தனித்தனியாக கழட்டி எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சிவசிதம்பரம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பூட்டியிருந்த கேட்டை உடைத்து பருப்பு உடைக்கும் இயந்திர பாகங்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், திருடு போன இயந்திரத்தின் மதிப்பு ரூ.3.50 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

SCROLL FOR NEXT