மதுராந்தகத்தில் காந்தி ஜெயந்தி விழா
மதுராந்தகம் நகர அனைத்து செட்டியார் நலச்சங்கத்தின் சார்பாக மதுராந்தகம் பஜார் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழன்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் நகர அனைத்து செட்டியார் நலச்சங்கத்தின் சார்பாக மதுராந்தகம் பஜார் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழன்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் நகர அனைத்து செட்டியார் நலச்சங்கத்தின் சார்பாக, மதுராந்தகம் பஜார் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு அணிவிக்கும் நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் கே.சுப்பிரமணிய செட்டியார் தலைமை தாங்கினார். செயலர் பி.ராஜசேகரன், இரா.தமிழ்விரும்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கெளரவத்தலைவர் என்.கே.பழனி, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன் ஆலோசகர் மருதமணி, துணைத்தலைவர் வி.ஆர்.சங்கர், வரதன், மல்லிகார்ஜூனன், வெங்கடேசன், தட்சிணாமூர்த்தி, நடராஜன், வேலுமணி, பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். காந்தியடிகள் திருவ சிலைக்கு கெளரவத்தலைவர் என்.கே.பழனி, சிவஞானம் ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது