முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி 2 கி.மீ. தூரத்திற்கு அங்கபிரதட்சணம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர் அ.தி.மு.க. சார்பில் ஏராளமான தொண்டர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி,

தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி 2 கி.மீ. தூரத்திற்கு அங்கபிரதட்சணம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர் அ.தி.மு.க. சார்பில் ஏராளமான தொண்டர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி,

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:55 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர் அ.தி.மு.க. சார்பில் ஏராளமான தொண்டர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி, சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கபிரதட்சணம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி ஆகியோர் தலைமையில் அங்கபிரதட்சணத்தைத் தொடங்கினர். அங்குள்ள ஆனந்த விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து ஆரம்பித்த அவர்கள் புறவழிச் சாலையில் உள்ள அருள்மிகு பெரியமாரியம்மன்கோயிலில் அங்கபிரதட்சணத்தை முடித்தனர். அங்கு கோயிலில் ஜெயலலிதா விடுதலை வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கே.நடராஜன், போக்குவரத்துக்கழக அ.தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் வி.எம்.போஸ், வீட்டுவசதி வாரிய தலைவர் பாபு, நகர்மன்ற உறுப்பினர் அ.மகேஸ்வரன், வழக்குரைஞர் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பி.திலகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி டி.எஸ்.பி. கே.முரளிதரன் தலைமையில் ஏராளமான போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →