புரட்டாசி மூன்றாம் சனி உற்சவம்: ஸ்ரீநிவாசபெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வடமேற்கில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் திருவண்ணாமலை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. மலையின் மேல் அழகான கோயிலில் ஸ்ரீநிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு
தற்போதைய செய்திகள்புரட்டாசி மூன்றாம் சனி உற்சவம்: ஸ்ரீநிவாசபெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வடமேற்கில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் திருவண்ணாமலை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. மலையின் மேல் அழகான கோயிலில் ஸ்ரீநிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மூன்றாம் சனி உற்சவத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வடமேற்கில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் திருவண்ணாமலை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. மலையின் மேல் அழகான கோயிலில் ஸ்ரீநிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனை மக்கள் தென்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.திருவேங்கடமுடையானைப் போலவே, இத்திருவண்ணாமலையிலும் ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கைககளை திருவடியைக் காட்டியவாறு உள்ளார். அவ்வாறே அவரின் திருவடியை சரணடைந்த பக்தர்கள் தங்கள் துன்பத்தை முழங்கால் அளவு வெள்ளத்தைக் கடப்பது போல எளிதாக கடந்து விடுவார்கள் என்பதை உணர்த்த மற்றொரு கரத்தை திருத்தொடையில் பொருத்தியும், இரு கரங்களிலும் சக்கரமும், சங்கும் ஏந்தியும், திருமார்பில் மகாலெட்சுமியுடனும், உயர்ந்த கிரீடம் தரித்து, கருணை பொங்கும் கண்களுடனும், அழகிய புன்முறுவலுடனும், இடையில் வாளுடன் எட்டடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும் காட்சி பக்தர்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
இம்மலையில் ஏறுவதற்கு வசதியாக 240 படிக்கட்டுகள் உள்ளன. மலையின் அடிவாரத்தில் அழகான கோனேரி என்னும் குளம் அமைந்துள்ளது. திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளை இவருக்கு செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுவதால், தென்திருப்பதி என்ற இத்தலம் போற்றப்படுகிறது.இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் 5 கிழமைகளிலும் உற்வசம் நடைபெறும். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்றாம் சனி உற்சவத்தையொட்டி, சுவாமிகளுக்கு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அரசு போக்குவரத்துக் கழகம் அண்டை மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் செய்திருந்தார்.