தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே நள்ளிரவில் கார் மீது வேன் மோதல்: 15 பேர் காயம்

மதுரை அருகே சமயநல்லூரைச் சேர்ந்த ருக்மணி குடும்பத்தினர் மற்றும் உறவினர் ஆகியோர் திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு சனிக்கிழமை வேனில் சென்றனர். அங்கு வழிபாடு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே நள்ளிரவில் முன்புறம் சென்ற கார் மீது வேன் மோதிய விபத்தில் தலைகுப்புற கவிழந்ததில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை அருகே சமயநல்லூரைச் சேர்ந்த ருக்மணி குடும்பத்தினர் மற்றும் உறவினர் ஆகியோர் திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு சனிக்கிழமை வேனில் சென்றனர். அங்கு வழிபாடு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நள்ளிரவில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்களாம். அப்போது, விருதுநகர் தனியார் பெண்கள் கல்லூரி அருகே முன்புறம் சென்ற கார் மீது வேன் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில்,வேனில் பயணம் செய்த ருக்மணி(52), பானுமதி(50), பசுபதி(56), உதயகுமார்(40) உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மதுரை அருகே பரவையைச் சேர்ந்த கார் டிரைவர் தினேஷ்பாண்டியன் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வேன் டிரைவர் ராஜரத்தினம்(29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

SCROLL FOR NEXT