ஜெயலலிதா வெற்றி பெற வேண்டி 150 பேர் மொட்டையடித்து நேர்ச்சை
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கர்நாடக மாநிலம் பெங்களூரு தனி நீதிமன்றத்தின் உத்திரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதா விடுதலை பெறவேண்டி தமிழகம் முழுக்க அதிமுகவினர்
அதிமுக பொதுச்செயலாளர் நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுதலை பெற வேண்டி திருப்பூர் மாவட்டம் கொழுமம், குமரலிங்கத்தை சேர்ந்த 150 பேர் மொட்டையடித்து நேர்ச்சை செலுத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கர்நாடக மாநிலம் பெங்களூரு தனி நீதிமன்றத்தின் உத்திரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதா விடுதலை பெறவேண்டி தமிழகம் முழுக்க அதிமுகவினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் பல்வேறு கோயில்களிலும் நெய்தீபம் போடுதல், மண்சாதம் சாப்பிடுதல், யாகம் வளர்த்தல் என சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெறவேண்டி புதன்கிழமை திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பேரூராட்சி, கொழுமம் ஊராட்சியில் இருந்து பேரூராட்சி செயலாளர் வரதராஜன், பேரூராட்சி தலைவர் சிவக்குமார் தலைமையில் சுமார் 200 பேர் பாதயாத்திரையாக வந்தனர். இதில் குமரலிங்கம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 120 பேரும், கொழுமம் ஊராட்சியை சேர்ந்த 30 பேரும் மொட்டையடித்தனர். மூன்றாம்படை வீடான திருஆவினன்குடி கோயிலில் சுவாமியை தரிசனம் செய்த பின்னர் ஊர்வலமாக சன்னதி வீதி வழியாக கிரிசுற்றி மலையேறி மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் இரவு தங்கத்தேர் புறப்பாடும் செய்தனர்.
மொட்டையடித்த அனைவரும் தலையில் சந்தனம் தடவி ஜெயலலிதா படம் போட்ட சீருடை அணிந்து ஜெயலலிதா வழக்குகளில் இருந்து வெற்றி பெற வேண்டும் என உணர்ச்சிகரமாக கோஷங்கள் எழுப்பி சென்றது பலரையும் ஈர்த்தது. நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன், அம்சகுமார், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.