சார்பு ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்து பேருந்தை மறிக்க முயன்ற ம.தி.மு.க. பேச்சாளர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைத்தலைவாசல் தெருவைச் சேர்ந்தவர் நா.ஜெயராமு (53). இவர் ம.தி.மு.க. பேச்சாளராம். ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலை அருகே வந்த அவர், அ.தி.மு.க.வினர் நடத்திய
தற்போதைய செய்திகள்சார்பு ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்து பேருந்தை மறிக்க முயன்ற ம.தி.மு.க. பேச்சாளர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைத்தலைவாசல் தெருவைச் சேர்ந்தவர் நா.ஜெயராமு (53). இவர் ம.தி.மு.க. பேச்சாளராம். ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலை அருகே வந்த அவர், அ.தி.மு.க.வினர் நடத்திய
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை காவல் சார்பு ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து பேருந்தை மறிக்க முயன்ற ம.தி.மு.க. பேச்சாளரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைத்தலைவாசல் தெருவைச் சேர்ந்தவர் நா.ஜெயராமு (53). இவர் ம.தி.மு.க. பேச்சாளராம். ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலை அருகே வந்த அவர், அ.தி.மு.க.வினர் நடத்திய உண்ணாவிரதத்தில் பேசியவர்கள் ம.தி.மு.க. பொதுச் செயலாளரைத் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகக் கூறி சாலையின் நடுவே சில செய்தித்தாள்களை கிழித்துப்போட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது பணியில் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர் தாமரைவிஷ்ணு, ஜெயராமுவிடம் போக்குவரத்திற்கு இடையூறு செய்யக் கூடாது என்று எவ்வளவோ கூறியும், அவரை பணி செய்யவிடாமல் தடுத்து தொடர்ந்து பிரச்னை செய்து கொண்டே இருந்தார்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் தாமரை விஷ்ணு புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெயராமுவைக் கைது செய்தனர்.