திருச்சி ராமஜெயம் கொலை போன்று செல்லோடேப் சுற்றப்பட்டு பெண் டாக்டர் கொலை: போலீஸார் விசாரணை
திருச்சி லால்குடி அருகே சமயபுரம் டோல்கேட் பகுதியில் பெண் மருத்துவர் கொலை ஒருவர், திருச்சி ராமஜெயத்தில் கொலையில் நடந்தது போன்று, முகம் முழுவதும் செல்லோடேப் சுற்றப்பட்டு
தற்போதைய செய்திகள்திருச்சி ராமஜெயம் கொலை போன்று செல்லோடேப் சுற்றப்பட்டு பெண் டாக்டர் கொலை: போலீஸார் விசாரணை
திருச்சி லால்குடி அருகே சமயபுரம் டோல்கேட் பகுதியில் பெண் மருத்துவர் கொலை ஒருவர், திருச்சி ராமஜெயத்தில் கொலையில் நடந்தது போன்று, முகம் முழுவதும் செல்லோடேப் சுற்றப்பட்டு
திருச்சி லால்குடி அருகே சமயபுரம் டோல்கேட் பகுதியில் பெண் மருத்துவர் கொலை ஒருவர், திருச்சி ராமஜெயத்தில் கொலையில் நடந்தது போன்று, முகம் முழுவதும் செல்லோடேப் சுற்றப்பட்டு கொலையாளிகள் அடையாளம் தெரியாத வகையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது போலீஸாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டோல்கேட் பகுதியில் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார் ஜூலியஸ் (60). இவர் டோல்கேட் அருகே மாருதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் ஜோஸ்வா (30) பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருகிறார். ஜூலியஸ் நம்பர் ஒன் டோல்கேட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 18 வருடங்களாக எம்.டி.டாக்டராக பணியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, மருத்துவர் செல்லோடேப்பால் முகம் முழுவதும் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதை அடுத்து, அண்டைவீட்டார், நம்பர் ஒன் டோல்கேட் காவல்நிலையத்துக்கு புகார் தெரிவித்தனர். காவல்துறையினர் வந்து சோதனை செய்து பார்த்ததில், மருத்துவரின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலி, கை வளையல்கள், வீட்டில் இருந்த பீரோ பொருள்கள் ஆகியவை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவற்றின் மதிப்பு தெரியவில்லை என்று போலீஸார் கூறினர்.