தண்ணீர் இல்லாததால் நகராட்சி கட்டண கழிப்பறை பூட்டு: பயணிகள் அவதி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான கட்டணக் கழிப்பறை சனிக்கிழமை பூட்டப்பட்டதால் திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த பக்தர்களும், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தற்போதைய செய்திகள்தண்ணீர் இல்லாததால் நகராட்சி கட்டண கழிப்பறை பூட்டு: பயணிகள் அவதி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான கட்டணக் கழிப்பறை சனிக்கிழமை பூட்டப்பட்டதால் திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த பக்தர்களும், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான கட்டணக் கழிப்பறை சனிக்கிழமை பூட்டப்பட்டதால் திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த பக்தர்களும், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறை உண்டு. இதனை டெண்டர் எடுத்து குறிப்பிட்ட நபர் நடத்தி வந்தார். இடையே நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்று கழிப்பறையை தொடர்ந்து நடத்தி வந்தார். இந்நிலையில் நகராட்சிக்கு பணம் கட்டாத சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை டெண்டர் எடுத்தவர் காலி செய்துவிட்டு சென்று விட்டார்.
சனிக்கிழமை காலை திருவண்ணாமலை கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் ஏராளமான பயணிகள் கட்டணக் கழிப்பறையை பயன்படுத்த வந்து பார்த்த போது அது பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அங்கிருந்து நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் கேட்டபோது, தண்ணீர் இல்லை அதனால் பூட்டப்பட்டுள்ளது என்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் பழனிவேலிடம் இது குறித்து நாம் கேட்டபோது, டெண்டர் எடுத்தவர் நகராட்சிக்கு பணம் கட்டாமல் காலி செய்துவிட்டார். தற்போது நகராட்சியே இதனை நடத்துகிறது. தண்ணீர் இல்லை என்றால் கொண்டு வந்து ஊற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.