பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது: ராமநதி, கருப்பாநதி அணைகள் நிரம்புகிறது
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 115.02 அடியாக இருந்தது. ராமநதி,
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 115.02 அடியாக இருந்தது. ராமநதி, கருப்பாநதி அணைகள் நி்ரம்பி வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் அணைகள், அருவிகளில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி கருப்பாநதி அணையில் 2 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 35 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 7 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 1.3 மி.மீ மழையும், நான்குனேரியில் 16 மி.மீ மழையும், தென்காசியில் 19.4 மி.மீ மழையும், செங்கோட்டையில் 1 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 15.2 மி.மீ மழையும் பெய்துள்ளது.
நீர்வரத்து குறைந்தது: நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் நீர்வரத்தும் குறைந்து காணப்படுகிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1362.85 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 593 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 36.53 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 68.10 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 40 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 59 கனஅடியும், வடக்கு பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 36.22 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 15 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
100 அடியை தாண்டியது: தொடர் மழையால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி 100.25 அடியாக இருந்தது. 153 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 115.02 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 74.55 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 83.60 அடியாகவும் இருந்தது.
ராமநதி, கருப்பாநதி நிரம்புகிறது: 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 77.50 அடியாக இருந்தது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 66.28 அடியாக இருந்தது. குண்டாறு, கடனாநதி அணைகள் நிரம்பியுள்ள நிலையில் இவ்விரு அணைகளும் ஓரிரு நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 117.25 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 20.00 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 26.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.99 அடியாகவும் இருந்தது. இம்மாவட்டத்தில் குறைந்த கொள்ளளவை கொண்ட அணைகள் நிரம்பி வருகிறது.