முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேங்கிய நீரில் மூழ்கி இரு மாணவிகள் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வேப்பங்குளம் கிராமத்சைச் சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி கண்ணன். இவரது முதல் மனைவி முனியம்மாள். இவர்களுக்கு ராஜாத்தி (18), மகாலட்சுமி (12) என்ற இரு மகள்கள் உண்டு.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேங்கிய நீரில் மூழ்கி இரு மாணவிகள் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வேப்பங்குளம் கிராமத்சைச் சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி கண்ணன். இவரது முதல் மனைவி முனியம்மாள். இவர்களுக்கு ராஜாத்தி (18), மகாலட்சுமி (12) என்ற இரு மகள்கள் உண்டு.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:06 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை தேங்கிய நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் உயிரிழந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வேப்பங்குளம் கிராமத்சைச் சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி கண்ணன். இவரது முதல் மனைவி முனியம்மாள். இவர்களுக்கு ராஜாத்தி (18), மகாலட்சுமி (12) என்ற இரு மகள்கள் உண்டு. முனியம்மாள் இறந்ததையடுத்து இரண்டாவதாக மாரியம்மாள் (27) என்பவரை திருமணம் முடித்துள்ளார். இவருக்கு முனியலட்சுமி (9), கனகா (7) ஆகிய இரு மகள் உண்டு. இவர்கள் இருவரும் வேங்குளத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முறை இரண்டு மற்றும் ஒன்றாம் வகுப்பில் படித்து வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை ஊரின் அருகேயுள்ள சித்தங்குளம் கால்வாயில் தேங்கியுள்ள நீரில் துணி துவைத்து குளிப்பதற்காக மாரியம்மாள் 4 பிள்ளைகளையும் அழைத்துச் சென்றுள்ளார். இவர் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது, ராஜாத்தியும் மகாலட்சுமியும் நீரில் மூழ்கிக் கொண்டு கூக்குரலிட்டு கை அசைத்துக் கொண்டிருந்துள்ளார்கள். இதனைப் பார்த்த மாரியம்மாள், சேலையை நீரில் வீசி எறிந்துள்ளார். அதனைப் பிடித்துக் கொண்டு இருவரும் கரை சேர்ந்தனர். பின்னர் முனியலட்சுமியையும் கனகாவையும் தேடியுள்ளார்கள். அவர்களைக் காணவில்லை. அவர்கள் நீரில் மூழ்கியது தெரிய வரவே, அங்கிருந்த ஆட்கள் நீரினுள் தேடியபோது, இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இது தொடர்பாக வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →