முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் இளம்பெண் எரித்து கொன்ற கணவர், மாமியாருக்கு ஆயுள் தண்டனை

பாளையங்கோட்டை அருகே திருவண்ணநாதபுரம் பொட்டல் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் மகன் செந்தில்குமார் (32). கூலித் தொழிலாளியான இவருக்கும் இதேபகுதியை சேர்ந்த அனந்தநாயகி (27)

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:07 AM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் கணவர், மாமியாருக்கு திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை அருகே திருவண்ணநாதபுரம் பொட்டல் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் மகன் செந்தில்குமார் (32). கூலித் தொழிலாளியான இவருக்கும் இதேபகுதியை சேர்ந்த அனந்தநாயகி (27) என்பவருக்கும் கடந்த 2004 இல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் உள்பட 3 குழந்தைகள்  உள்ளன.

இந்நிலையில் அனந்தநாயகியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட செந்தில்குமார், அவரை அடித்து துன்புறுத்தி வந்தாராம். மேலும் கூடுதலாக வரதட்சணைக் கேட்டு கணவர், மாமியார் ஆகியோரும் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 21.03.2010 அன்று இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது செந்தில்குமார், அனந்தநாயகியின் மீது மண்ணெண்ணெயை ஊற்றினாராம். செந்தில்குமாரின் தாயார் பார்வதியின் தூண்டுதலின்பேரில் அனந்தநாயகியின் மீது தீ வைத்தாராம். இதில் பலத்த காயமடைந்த அனந்தநாயகி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழக்கும் தருவாயில் அனந்தநாயகி அளித்த மரண வாக்குமூலத்தில் தனது கணவரும், மாமியாரும் சேர்ந்து தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்தாராம். இதையடுத்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திருநெல்வேலி மகளிர் நீதிமன்ற நீதிபதி கலியமூர்த்தி, திங்கள்கிழமை அனந்தநாயகியை எரித்து கொன்றதாக அவரது கணவர் செந்தில்குமார், மாமியார் பார்வதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக மேகலாகென்னடி ஆஜரானார்.

முழு கட்டுரையைப் படிக்க →