முகப்பு
தற்போதைய செய்திகள்

இளைஞர் கொலை எதிரொலி: வீரவநல்லூரில் 4,000 வாழைகள் வெட்டி சேதம்- போலீஸ் குவிப்பு

வீரவநல்லூர் கோட்டை வாசல்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சுரேஷ் (30). கூலித் தொழிலாளியான இவர் புதன்கிழமை கொலை செய்யப்பட்டார். கடந்த 2013 இல் வெள்ளபாண்டி கொலை செய்யப்பட்டதற்கு

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:08 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக அப்பகுதியில் 4,000 வாழைகள் வெட்டிச் சேதப்படுத்தப்பட்டன. இதனை அடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

வீரவநல்லூர் கோட்டை வாசல்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சுரேஷ் (30). கூலித் தொழிலாளியான இவர் புதன்கிழமை கொலை செய்யப்பட்டார். கடந்த 2013 இல் வெள்ளபாண்டி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சுரேஷ் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.இக்கொலையில் தொடர்புடைய நயினார்காலனியை சேர்ந்த சந்திரன், அவரது மகன் வழக்குரைஞரான செந்தில்குமார் உள்பட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். இதனிடையே வீரவநல்லூர் அருகேயுள்ள நயினார்காலனி, தம்பிரான்காலனி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 4,000 வாழைகள் புதன்கிழமை நள்ளிரவில் வெட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

சுரேஷ் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக வாழையினை வெட்டி சேதப்படுத்தி இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இதனை அடுத்து நயினார்காலனி, தம்பிரான்காலனி, கோட்டை வாசல் தெரு மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →