தற்போதைய செய்திகள்

விருதுநகரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிபிஎம், சிபிஐ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.வெங்கட்டராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.

எஸ். பாண்டியன்

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சிபிஎம்-சிபிஐ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.வெங்கட்டராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பொன்னுப்பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் சேகர், சிபிஐயின் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வினால் அனைத்து பொருள்களின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கல்வி, மருத்துவம், விவசாயம் மற்றும் 10 வேலை திட்டங்களுக்கு மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஒற்றுமைக்கு எதிராக மதவெறி நடவடிக்கைகளை வளர்த்து வருவது, கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வறட்சி நிவாரண பணிகளை தொடங்காமல் இருப்பது, தொழிலாளர் விரோத போக்கு, கல்வி தனியார்மயம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத போக்குகளை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், வேலுச்சாமி, கணேசன், லட்சுமி, விஜயமுருகன், சிபிஐ சார்பில் சீனிவாசன், ரவி ஆகியோர் மத்திய, மாநில அரசுகளின் விரோதப் போக்குகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இப்போராட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிபிஎம், சிபிஐயைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT