மதுரையில் அரசு காப்பகத்தில் இருந்த 2 பெண்கள் திடீரென மாயமானதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை திருப்பாலையில் அரசு பெண்கள் காப்பகம் உள்ளது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த நூரின், கன்னியாகுமரி மாவட்டம் வலைசேரி பகுதியைச் சேர்ந்த லாவன்யா ஆகியோர் தங்கியிருந்தனர்.சனிக்கிழமை பகலில் இருவரும் காப்பக அலுவலர்கள் அனுமதி பெற்று வெளியே சென்றவர்கள் திரும்பவில்லையாம். ஞாயிறு பகல் வரை காப்பகத்துக்கு இரு பெண்களும் வராததால் சந்தேகமடைந்த காப்பக கண்காணிப்பாளர் விஜயலட்சுமி ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.