தற்போதைய செய்திகள்

காஷ்மீர் நிவாரணத்திற்கு ஒரு நாள் ஊதியத்தை அளிக்க பேரூராட்சி பணியாளர்கள் முடிவு

சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ் பேசுகையில்: வெள்ளத்தின் சீற்றத்தால் காஷ்மீர் பேரழிவைச்

Jeyakumar

காஷ்மீர் நிவாரணத்திற்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை தமிழக முதல்வரிடம் வழங்க தமிழ்நாடு பேரூராட்சி பணியார்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ் பேசுகையில்: வெள்ளத்தின் சீற்றத்தால் காஷ்மீர் பேரழிவைச் சந்தித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, இருப்பிடங்களைவிட்டு இடம் பெய்ர்ந்துள்ளனர். இந்த இயற்கைப் பேரழிவை, தேசிய பேரிடர் என பிரதம்ர் அறிவித்துள்ள நிலையில், சக குடிமக்களின் துயரத்தைப் போக்க தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் அனைவரும் ஒரு நாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தை வரவேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பா.ராஜேந்திரசோழன் உரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காஷ்மீர் நிவாரண நிதிக்கு செப்டம்பர் மாதத்தின் ஒரு நாள் ஊதியத்தை அளிப்பது.சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் பாலித்தீன் பைகள் பயன்பாட்டிற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட துணைத் தலைவர் த.பிலிப் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா கோலாகலம்

நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

தென்னை மரத்தில் இருந்து விழுந்த விவசாயி உயிரிழப்பு

பாமகவில் ராமதாஸ் வழிகாட்டி மட்டும்தான்: கே.பாலு

அரசு மருத்துவக் கல்லூரி நியமனத்தில் சிபிஐ விசாரணை: விசிக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT