முகப்பு
தற்போதைய செய்திகள்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டி பைபாஸ் கோரிமேடு பகுதியில் பழைய கும்மிடிப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த வேளாண்மை சங்கத்தில் புதுகும்மிடிப்பூண்டி உள்ளிட்ட

தற்போதைய செய்திகள்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டி பைபாஸ் கோரிமேடு பகுதியில் பழைய கும்மிடிப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த வேளாண்மை சங்கத்தில் புதுகும்மிடிப்பூண்டி உள்ளிட்ட

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:47 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி பைபாஸ் கோரிமேடு பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மர்ம நபர்கள் நடத்திய கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது.

கும்மிடிப்பூண்டி பைபாஸ் கோரிமேடு பகுதியில் பழைய கும்மிடிப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த வேளாண்மை சங்கத்தில் புதுகும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் உறுப்பினர்களாக இருந்து விவசாய கடன், நகை கடன் உள்ளிட்ட சேவைகளை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திங்களன்று அதிகாலை மர்ம நபர்கள் இந்த அலுவலகத்தின் கிரில் கேட்டை உடைத்து அலுவலகத்தின் மரக்கதவை உடைக்க முயன்றனர். தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே இந்த கடன் சங்கம் இருப்பதால் அவ்வழியே ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டத்தை கண்டதும் கொள்ளை முயற்சியை கைவிட்டு திருடர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

தொடர்ந்து திங்களன்று காலை அலுவலர்கள் வந்து பார்த்த போது கொள்ளை முயற்சி நடைபெற்று இருப்பதை கண்டு இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →