நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி பெண் சாவு : 9 பேர் காயம்
சென்னையிலிருந்து ஒசூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஆம்பூர் அருகே அய்யனூர் கிராமத்தில் வாணியம்பாடி நோக்கி சென்ற ஒரு லாரி தேசிய நெடுஞ்சாலை தடுப்பு மீது மோதி
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை இறந்தார். 9 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து ஒசூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஆம்பூர் அருகே அய்யனூர் கிராமத்தில் வாணியம்பாடி நோக்கி சென்ற ஒரு லாரி தேசிய நெடுஞ்சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்தது. நின்று கொண்டிருந்த அந்த லாரி மீது ஒசூர் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. அதில் ஒசூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வம் (35) சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் டிரைவர் கார்த்திகேயன் (43), நடத்துனர் துரைராஜ் (42), ஒசூரை சேர்ந்த முரளி (43), நீதிபதி (44), கிரண்குமார் (32), விஜய் (24), லோகேஷ் உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். இவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
Advertisement