முகப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டு துப்பாக்கி பதுக்கிய இருவர் கைது

வேப்ப்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கிய இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 4 ஏப்ரல், 2015 at 4:06 PM
பகிர்:

வேப்ப்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கிய இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

வேப்பங்குப்பம் அருகே கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த மாவீரன் என்பவருடைய நிலத்தில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸôர் நடத்திய சோதனையில் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.  அதன்பேரில் மாவீரன் (28), அவரது நண்பர் பாண்டியன் (26)  ஆகிய இருவரையும் போலீஸôர் கைது செய்தனர்.   பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.