முகப்பு
தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி சிதம்பரத்தில் தமாகாவினர் உண்ணாவிரதம்

சிதம்பரம் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்றக்கோரி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

சிதம்பரம் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்றக்கோரி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

சிதம்பரம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மாலைக்கட்டித்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகேயும், மேலவீதி பேருந்து நிறுத்தத்திலும் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்றக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் சிதம்பரம் காந்திசிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் நகர தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் தலைமை வகித்தார். மூப்பனார் பேரவை நிறுவனரும், பொதுச்செயலாளருமான ஜெமினி எம்.என்.ராதா, இளைஞரணி தலைவர் ராஜாசம்பத்குமார், வாசன் நற்பணி மன்ற பொதுச் செயலாளர் முத்துக்குமார், தலைவர் ஆறுமுகம், ஆட்டோ டி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமார், பாண்டு, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் கோ.ஜனகம், மீனாசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜெயச்சந்திரன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசினார். இளங்கோ நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.