முகப்பு
தற்போதைய செய்திகள்

நடராஜர் கோயில் கும்பாபிஷேகம்: சப்த நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்படுகிறது

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மகாகும்பாபிஷேகத்திற்கு சப்த நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்படுகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:08 AM
பகிர்:

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மகாகும்பாபிஷேகத்திற்கு சப்த நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்படுகிறது.

பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே.1-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை கும்பாபிஷேகமும், அதே நேரத்தில் ராஜசபை மற்றும் நான்கு ராஜகோபுரங்களும் மகாகும்பாபிஷகம் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 2-ம் தேதி தேர்த்திருவிழாவும், 3-ம் தேதி அதிகாலை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு மேல் தரிசனம் மற்றும் சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4-ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சி நடைபெறுகிறது. மேற்கண்ட கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான
மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்மாபிஷேகத்திற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சிந்து, காவிரி, நர்மதை ஆகிய சப்த நதிகளில் இருந்து குடங்களுகில் புனித நீர் கொண்டு வர பல்வேறு பிரிவுகளாக பொதுதீட்சிதர்கள் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் ஒருங்கிணைந்து சப்த நதிகளில் புனிதநீருடன் ஏப்.13-ம் தேதி சிதம்பரம் நகருக்கு வருகை தருகின்றனர். அன்றைய தினம் புனித நீர் குடங்கள் நான்குவீதிகளிலும் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.