முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் அம்பேத்கர் 125-வது பிறந்தநாள் விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் 125-வது பிறந்தநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:09 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் 125-வது பிறந்தநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ஜெ.வசந்தகுமார், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ரத்தினசாமி மற்றும் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக எஸ்சி., எஸ்டி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் பழனிவேல்ராஜா செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.