விருதுநகரில் பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் அலுவலக வளாகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் விருதுநகர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சக்கணன் தலைமையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நஷ்டத்தில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை சீரமைக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்புதல், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் மற்றும் தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.