தற்போதைய செய்திகள்

பள்ளிக்கரணை அருகே மின்சாரம் பாய்ந்து 4 வயது சிறுவன் சாவு

சென்னை பள்ளிக்கரணை அருகே மின்சாரம் பாய்ந்து 4 வயது சிறுவன் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாசு

சென்னை பள்ளிக்கரணை அருகே மின்சாரம் பாய்ந்து 4 வயது சிறுவன் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கரணை சித்தாலப்பாக்கம் அருகே உள்ள அரசன்கழனி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜி. இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வீட்டின் பின்பகுதியில் ஒரு கட்டுமான நிறுவனம் புதிதாக குடியிருப்பு கட்டி வருகிறது. அந்த குடியிருப்புக்கு விஜியின் வீட்டின் முன்பகுதி வழியாக மின்வயர் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் விஜியின் மகன் சதீஷ் (4) சனிக்கிழமை வீட்டின் முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த கட்டுமான நிறுவனத்துக்குச் சென்ற மின்வயரை சதீஷ் மிதித்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. பலத்த காயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தான். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT