தற்போதைய செய்திகள்

செப். 9-ல் நகரமைப்பு ஆய்வாளர் பணியிடத்துக்கான நேர்முக தேர்வு

பெரம்பலூர் நகராட்சியில் காலியாக உள்ள 1 நகரமைப்பு ஆய்வாளர் பணியிடத்துக்கான நேர்முகத் தேர்வு செப். 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர் நகராட்சியில் காலியாக உள்ள 1 நகரமைப்பு ஆய்வாளர் பணியிடத்துக்கான நேர்முகத் தேர்வு செப். 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்த நேர்முக தேர்வில் கலந்துகொள்ள விரும்புவோர் உரிய தகுதி சான்றிதழ்களுடன் செப். 8 ஆம் தேதி மாலை 5  மணிக்குள் ஆணையர், பெரம்பலூர் நகராட்சி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த நபர்களுக்கு நேர்காணலில் பங்கேற்க எவ்வித அழைப்பும் அனுப்பப்படமாட்டாது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க பொதுப்போட்டி முன்னுரிமை பெற்றவர்.

  தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி வாரியம் மூலம் எல்.சி.இ அல்லது, டிப்ளமோ சிவில் பொறியாளர் பாடத்தில் தேர்ச்சி, அல்லது மாநில நிறுவனம் கூட்டுறவு தொழில் கல்வி திருச்சி மூலம் வழங்குகின்ற டிப்ளமோ கட்டட கலை மற்றும் உள்கட்டட வடிவமைப்பு (ஆர்கிடெக்) சான்றிதழ், அல்லது தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள ஏதாவது சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். பணஇக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் நகரமைப்பு பிரிவு சம்மந்தப்பட்ட கட்டட வரைபட அனுமதி வழங்குதல் ஆக்கிரமிப்பு அகற்றுதல், அனுமதியற்ற கட்டடங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான நகரமைப்பு பிரிவு சம்மந்தபட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ள வேண்டும்.

   ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர், பழங்குடியினர் 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 முதல் 32 வயதுக்குள்பட்டவராகவும், இதர பிரிவினர் 18 முதல் 30 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

SCROLL FOR NEXT