விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை: 6 சவரன் நகை திருட்டு
விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 6 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 6 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் சாமியார் கிணற்று தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவரது மனைவி ஜோதி. இருவரும் புதன்கிழமை மாலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டி விட்டு திறவுகோளை பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு சென்றார்களாம். பின்னர் இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட கதவு திறந்து கிடந்துள்ளது. இதைப் பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து உள்ளே நுழைந்து பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதன் உள்ளே இருந்த 6 சவரன் நகையையும் யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தது தெரிவந்தது.
Advertisement
இது குறித்து உடனே மேற்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.