முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் ஆட்சிக்குழு கூட்டம்

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் நிகழாண்டிற்கான இரண்டாம் ஆட்சிக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 31 ஆகஸ்ட், 2015 at 5:46 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:05 PM

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் நிகழாண்டிற்கான இரண்டாம் ஆட்சிக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்தார். இதில், விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் வட்டார தொழில்நுட்பக் குழு மூலம் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சிகள், செயல் விளக்கம், பட்டறிவு பயணம், விவசாய விளைபொருள் ஆர்வலர் குழுக்கள் அமைத்தல், பண்ணை பள்ளிகள் மூலம் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தல் போன்ற பல்வறு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், இத்திட்டத்தின் நிர்வாக குழு மற்றும் ஆட்சிக்குழுவின் புதிய அரசு சாரா உறுப்பினர்கள் நியமன விவரங்களும் எடுத்துரைக்ப்பட்டன. அதேபோல், 2014-15ம் ஆண்டிற்கான முதல் கட்ட நிதி ரூ.1 லட்சம் மற்றும் மூன்றம் கட்ட நிதி ரூ.23.50 லட்சத்தினை இனம் வாரியாகவும், வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களுக்கு பிரித்து வழங்கும் வகையில் ஒப்புதலும் பெறப்பட்டது. அதையடுத்து, இத்திட்டத்தில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில், வேளாண்மை இணை இயக்குநர் கனகராஜன், நேர்முக உதவியாளர்(வேளாண்மை) செல்வம், துணை இயக்குநர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.