முகப்பு
தற்போதைய செய்திகள்

சட்டக்கல்லூரி இடமாற்றம்: அண்ணாமலைப் பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட வந்த 20 மாணவர்கள் கைது

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக வந்த 20 மாணவர்கள் போலீஸார் வழிமறித்து கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:43 AM
பகிர்:

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக வந்த 20 மாணவர்கள் போலீஸார் வழிமறித்து கைது செய்தனர்.

சட்டக்கல்லூரி இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி பல்கலைக்கழக மாணவர் பாபு சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மனு அளித்தார். போலீஸார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். இந்நிலையில் மாணவர் பாபு தலைமையில் முன்னாள் மாணவி வளர்மதி உள்ளிட்ட சுமார் 20 மாணவர்கள் முல்லை விடுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பூமா கோயில் நோக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தனர். அப்போது
சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேலு, இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் மாணவர்களை வழிமறித்து, அனுமதியின்றி ஊர்வலமாக வந்ததாக கூறி கைது செய்தனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.