நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி நடத்தக்கூடாது: மூன்று தீட்சிதர்கள் உண்ணாவிரதம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில், கோயில் புரணாத்திற்கு எதிரான நாட்டியாஞ்சலியை நடத்தக்கூடாது என வலியுறுத்தி மூன்று தீட்சிதர்கள் திங்கள்கிழமை காலை முதல் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில், கோயில் புரணாத்திற்கு எதிரான நாட்டியாஞ்சலியை நடத்தக்கூடாது என வலியுறுத்தி மூன்று தீட்சிதர்கள் திங்கள்கிழமை காலை முதல் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த 33 ஆண்டுகளாக நகர பிரமுகர்கள் அடங்கிய நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து அழைப்பிதழ் அடித்துள்ளனர். இதனால் வருகிற பிப்.17-ம் தேதி தீட்சிதர்கள் நடத்தும் நாட்டியாஞ்சலி விழா கோயிலுக்குள்ளும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் நடத்தும் நாட்டியாஞ்சலி விழா தெற்குவீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்திலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் கோயிலுக்குள் நாட்டியாஞ்சலி நடத்தக்கூடாது என வலியுறுத்தி கிழக்கு வாயில் 21 படிகளுக்கு முன்பு சு.கைலாசசங்கர தீட்சிசர், கைலாச ஆனந்த நடராஜ தீட்சிதர், ராஜா தீட்சிதர் ஆகிய மூன்று தீட்சிதர்கள் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து சு.கைலாசசங்கர தீட்சிதர் தெரிவித்தது: உச்சநீதிமன்ற ஆணையின்படி பொதுதீட்சிதர்கள் ஸ்ரீநடராஜமூர்த்திக்கு பூஜையை தவிர வேறு எந்த வேலையும் பார்க்க தேவையில்லை. 9 தீட்சிசதர்கள் சேர்ந்து பிப்.17-ம் தேதி முதல் கோயிலுக்குள் நாட்டியாஞ்சலி நடத்துகின்றனர். நாட்டியாஞ்சலி கோயில் புராணத்திற்கும், இறையாண்மைக்கும் எதிரானதால் நாட்டியாஞ்சலி நடத்த தேவையில்லை.
எனவே நாட்டியாஞ்சலி விழாவை நடத்தக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம். 1993-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நடத்துக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு அங்கும் உண்ணாவிரதம் இருந்தேன்.
பின்னர் வட்டாட்சியர் முன்பு அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கூடியது. கூட்டத்தில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் இந்த ஆண்டுடன் நாட்டியாஞ்சலியை முடித்துக்கொள்வதாக உறுதியளித்தை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றேன். அதுபோல் இந்த ஆண்டு தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளோம் என சு.கைலாச சங்கர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.