முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் தெற்குவீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் 34வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:45 AM
பகிர்:

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் தெற்குவீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் 34வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.

கடந்த 33 ஆண்டுகளாக சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் நடராஜர் கோயிலுக்குள் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். இந்த ஆண்டு நாட்டியாஞ்சலியை கோயிலுக்குள் நடத்த அனுமதி கோரி பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கர தீட்சிதரிடம் கடிதம் அளித்தனர். ஆனால் தீட்சிதர்களே கோயிலுக்கு நாட்டியாஞ்சலி விழா நடத்துவதாக அறிவித்ததால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனையடுத்து நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் சிதம்பரம் தெற்குரதவீதியில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் (வி.எஸ்.டிரஸ்ட் இடத்தில்) 34-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். தொடர்ந்து 5 நாட்கள் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது.

நாட்டியாஞ்சலியில் பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்று நாட்டியாடுகின்றனர்.  தினமும் மாலை 6 மணி முதல் தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை நாட்டியமாடிய கலைஞர்கள்: பெங்களூர் நடராஜர் ஆர்ட்ஸ் அகாதெமி மாணவர்கள் பரதம், புதுதில்லி ரெட்டி டி.லட்சுமி பரதம், ரஞ்சனி நாயர் கூச்சிப்புடி நடனம், தமிழ்நாடு இசை, கவின் கலைப்பல்கலைக்கழக மாணவியரின் நமசிவாய நாட்டிய நாடகம், பெங்களூர் சுரபி சந்தோஷ், மும்பைசோனாலி தப்ராய், கொல்கத்தா தேபல் தேவ்ஜனா, மும்பை பூஜா பலேராவ் ஆகியோரின் பரதம்

விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், வி.பாலதண்டாயுதம், செயலாளர்கள் ஆர்.நாகசுவாமி, ஏ.சம்பந்தம், இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் ஆர்.ராமநாதன் மற்றும் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துக்குமரன், ஆர்.சபாநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.