முகப்பு
தற்போதைய செய்திகள்

30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிப் 24-ம் தேதி சென்னையில் மறியல் போராட்டம்: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள தர ஊதியத்தை வழங்க வேண்டும். அரசு மற்றும்

Updated On : 21 பிப்ரவரி, 2015 at 6:44 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:40 AM

30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிப்.24-ம் தேதி சென்னையில் மறியல் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிவித்தது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள தர ஊதியத்தை வழங்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் ,நுலகர்கள்,உடற்கல்வி இயக்குநர்கள்,அலுவலர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்.

மானியக்குழு பரிந்துரைப்படி ஓய்வு வயதினை 65-ஆக உயர்தத வேண்டும். அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் சுயநிதி வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். இதில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாலர்களுக்கு பணி பாதுகாப்பு உடன் குறைந்த பட்ச ஊதியம் ரூ.25,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

கூட்டத்துக்கு அக்கழக மாநிலச் பொருளர் சி.திருச்செல்வம் தலைமை வகித்தார். தலைவர் சீ.தமிழ்மணி முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட செயலர் டேவிட்,உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.