தற்போதைய செய்திகள்

திருச்சி அருகே சாலையின் தடுப்புச் சுவர் மீது கார் மோதல்: தம்பதி சாவு

கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ்ஐயா மகன் அசோக் (40). மின் பொறியாளரான இவர், வெள்ளிக்கிழமை தனது மனைவி கிருபா (35), குழந்தைகள்

சி.சண்முகவேல்

திருச்சி ராம்ஜிநகர் அருகே சனிக்கிழமை அதிகாலை சாலையின் தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலாச் சென்ற கேரளா தம்பதியினர் உயிரிழந்தனர்.

கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ்ஐயா மகன் அசோக் (40). மின் பொறியாளரான இவர், வெள்ளிக்கிழமை தனது மனைவி கிருபா (35), குழந்தைகள் ஆண்ட்ரோ (10), டேனியல்(7),டெல்சியா(6) மற்றும் தனது தாய் பானுமதி , தந்தை தாமஸ் ஐயா, மாமியார் முத்துலட்சுமி ஆகியோரை அழைத்துக்கொண்டு கேரளாவிலிருந்து ஒரு காரில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். காரை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் ஓட்டினார்.

கார் சனிக்கிழமை அதிகாலை வண்ணாங்கோவில் அருகே வந்த போது, அப்போது நிலைத்தடுமாறி திருச்சி-திண்டுக்கல் சாலையிலுள்ள புள்ளம்பாடி மேட்டு கட்டளைவாய்க்கால் பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து  தகவலறிந்த ராம்ஜிநகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று இடிப்பாடுகளில் பலத்த காயத்துடன் இருந்த அசோக் மனைவி கிருபா மற்றும் அவரது 3 குழந்தைகள் உள்பட 8 பேரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கிருபா உயிரிழந்தார்.காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT