தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் த.மா.காவில் 1 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம்: முன்னாள் எம்.பி என்.எஸ்.வி.சித்தன்

விருதுநகர் மாவட்டத்தில் த.மா.காவில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக முன்னாள் மக்களவை

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் த.மா.காவில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக முன்னாள் மக்களவை உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் தெரிவித்தார்.

விருதுநகரில் தீவிர உறுப்பினர் சேர்க்கையை வலியுறுத்தி சைக்கிள் பேரணியை சனிக்கிழமை தொடங்கி வைப்பதற்காக வந்தார். அப்போது, இது தொடர்பாக அவர் காமராஜர் நினைவில்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு நவ-3-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் த.மா.காவை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து திருச்சியில் நவ-28ம் தேதி கூட்டம் நடத்தினார். தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கூட்டத்தில் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார். பின்னர் கடந்த டிச.11ம் தேதி முதல் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கையை மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளார்.

அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இம்மாவட்டத்தில் 1 லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 90 ஆயிரம் பேருக்கு உறுப்பினராக சேர்ப்பதற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் 15 பேரை உறுப்பினராக முழு விவரங்களுடன் சேர்த்தால் அவருக்கு சிறப்பு உறுப்பினர் அடையாள அட்டையாக உறுப்பினர் புகைப்படம், தலைவர் படத்துடன் கூடிய முகவரி மற்றும் ரத்த பிரிவு விவரம் ஆகியவைகளுடன் வழங்கப்படும்.

மேலும், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஊழலற்ற நிர்வாகத்தை த.மா.கா முன்னெடுத்து நடத்தும். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள ரயில்வே மேம்பால பிரச்னையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். தற்போது, இந்தியா முழுவதிலும் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தபடியாக பன்றி காய்ச்சல் எனும் உயிர்கொல்லி நோய் பரவிவருகிறது. அதை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அப்போது, உடன் சிவகாசி முன்னாள் நகராட்சி தலைவர் ஞானசேகரன், ஒருங்கிணைப்பாளர் ஐ.என்.டி.யு.சி பாலசுப்பிரமணியம், நகராட்சி உறுப்பினர்கள்  ராஜ்குமார், பழனிக்குமார், மாரீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT