தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தி நடவடிக்கை

விருதுநகர் பகுதியில் சிறுமிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவதாக ஆட்சியருக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் உடனே குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெற இருக்கிற

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே சிறுமிகள் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் பகுதியில் சிறுமிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவதாக ஆட்சியருக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் உடனே குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெற இருக்கிற சிறுமிகள் திருமணத்தை தடுத்த நிறுத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பாண்டியம்மாள் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பேராபட்டி கிராமத்திற்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், ஆள்கடத்தல் தடுப்பு போலீஸார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் ஆகியோர் சனிக்கிழமை இரவு நேரில் சென்றனர். அங்கு விசாரணை செய்ததில் இக்கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி(22). இவர் இப்பகுதியில் வாகன பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவிக்கும் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது.

அதேபோல், விருதுநகர் அருகே பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான  பிளஸ்1 மாணவிக்கும், இதே ஊரைச்சேர்ந்த சதீஷ்ஆனந்த்(27). இவர் ராஜபாளையம் பகுதியில் தனியார் மில்லில் பணியில் இருந்து வருகிறார். இவர்களுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இருவீட்டாரையும் அழைத்து குறிப்பிட்ட வயதை அடையாத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும் என்பது குறித்து அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து எழுத்து மூலமாக எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். மேலும், இரண்டு சிறுமிகளையும் விருதுநகர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்து நடவடிக்கை எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT