ஆம்பூருக்கு அரசு பஸ்ஸில் வந்த பெண்ணிடம் 4 லட்ச ரூபாய் திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் ராஜவீதியை சேர்ந்த வியாபாரி சக்திவேலின் மனைவி தேவகி (54). இவர் சம்பவத்தன்று மாலை ஆம்பூரில் உள்ள தனது உறவினர் வெங்கடேசன்
ஆம்பூருக்கு பஸ்சில் வந்த பெண்ணிடம் ரூ. 4 இலட்சம் செவ்வாய்க்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் ராஜவீதியை சேர்ந்த வியாபாரி சக்திவேலின் மனைவி தேவகி (54). இவர் சம்பவத்தன்று மாலை ஆம்பூரில் உள்ள தனது உறவினர் வெங்கடேசன் வீட்டிற்கு பஸ்சில் வந்துள்ளார். திருப்பத்தூரிலிருந்து ஆம்பூருக்கு தனியார் பஸ்சில் பயணம் செய்துள்ளார். அவர் ஆம்பூரில் வீட்டுமனை வாங்குவதற்காக ரொக்கப் பணம் ரூ.4 இலட்சத்தை பையில் கொண்டு வந்துள்ளார். ஆம்பூர் பஸ் நிலையத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி பார்த்தபோது பையில் வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ.4 இலட்சம் திருட்டுபோயிருப்பது தெரியவந்தது. முயன்ற போது தனது பையில் இருந்த 4 லட்ச ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் ஆம்பூர் டவுன் போலீஸில் புகார் செய்தார். வழக்குபதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.
Advertisement