தற்போதைய செய்திகள்

விருதுநகர் ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் பணப்பையை திருடியவர் கைது

விருதுநகர் சூலக்கரை மின்வாரிய காலனியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(50). இவர் தனது குடும்பத்தினருடன் நாகர்கோவில் சென்று சனிக்கிழமை இரவு விருதுநகர் ரயில் நிலையத்தில்

எஸ். பாண்டியன்

விருதுநகர் ரயில் நிலையத்தில் பெண் பயணியின் பணப்பையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபரை பொதுமக்கள் துரத்தி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் சூலக்கரை மின்வாரிய காலனியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(50). இவர் தனது குடும்பத்தினருடன் நாகர்கோவில் சென்று சனிக்கிழமை இரவு விருதுநகர் ரயில் நிலையத்தில் இரங்கினாராம். பின்னர் 2-வது நடைமேடையில் இருந்து முதல் நடைமேடை பகுதிக்கு வந்து கொண்டிருக்கும் போது முத்துராமலிங்கத்தின் மனைவி காளீஸ்வரி வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் பறித்துச் கொண்டு ஓடினாராம்.

அதில், ரொக்கம், ஏ.டி.எம் கார்டு மற்றும் கைபேசி ஆகியவை இருந்தது. பின்னர் அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்ததை தொடர்ந்து விரைவாக துரத்திச் சென்று பிடித்து மர்ம நபரை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், போலீஸார் விசாரணை செய்ததில் மதுரை அருகே ஹார்விபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணின் மகன் மணிகண்டன் என்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்கு பதிந்து கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT