ஆம்பூரில் ரயிலில் சிக்கி 10 காட்டுபன்றிகள் சாவு
ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் காப்பு காட்டில் அதிக அளவில் காட்டு பன்றிகள் வசித்து வருகின்றன. புதன்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் காட்டுபன்றிகள் சில நடராஜபுரம் கானாறு
ஆம்பூரில் புதன்கிழமை அதிகாலை ரயில் தண்டவாளத்தை கடந்த 10 காட்டுபன்றிகள் ரயிலில் சிக்கி இறந்தன.
ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் காப்பு காட்டில் அதிக அளவில் காட்டு பன்றிகள் வசித்து வருகின்றன. புதன்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் காட்டுபன்றிகள் சில நடராஜபுரம் கானாறு அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது ஆம்பூரில் இருந்து காட்பாடி வழியாக சென்ற ஒரு ரயிலில் 10 காட்டு பன்றிகள் சிக்கி இறந்தன. அவ்வழியாக சென்ற சிலர் இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடன் அங்கு வந்த வன ஊழியர்கள் பன்றிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கன்னிகாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உதவி கால்நடை மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் பிரேத பரிசோதனை செய்தார்.
பின்னர், பன்றிகளின் சடலங்கள் அருகில் உள்ள கம்பிகொல்லை பகுதியில் இயங்கி வரும் வனச்சரக நர்சரி வளாகத்தில் எரிக்கப்பட்டது.
Advertisement