தற்போதைய செய்திகள்

இலங்கை அதிபர் சிறீசேனா அடுத்த மாதம் இந்தியா வருகை

தினமணி

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரி பால சிறீசேனா நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற எளிய விழாவில் பதவியேற்றார்.

அவருடன், புதிய பிரதமராக ரனில் விக்கிரம சிங்கே பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறீசேனாவுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் இரு நாடுகளின் உறவுகளை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்வோம் என்று கூறி இருந்த அவர், இந்தியாவுக்கு வருமாறு சிறிசேனாவுக்கு அழைப்பு விடுத்ததோடு, அவரது வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று அதிபர் சிறிசேனா அடுத்த மாதம் இந்தியா வர இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் ரஜித சேனரத்னா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார். அதிபரின் இந்திய சுற்றுப்பயண தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT