விருதுநகர் நகராட்சியில் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 10-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 15-ம் தேதி வரையில் நடைபெற்றது.
இதில், விருதுநகர் நகராட்சியில் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் வகையில் 6-இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை நகராட்சி தலைவர் மா.சாந்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில், துணைத் தலைவர் மாரியப்பன், நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மணி, நகராட்சி உறுப்பினர் முகமது நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும், காய்சசல் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவு நீர் தூர்வாறுதல், குப்பைகள் அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துணைத்தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட நகராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.