தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 22-ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த முடிவு

சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியின் படி புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வருகிற 22-ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

எஸ். பாண்டியன்

சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியின் படி புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வருகிற 22-ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெ.லெட்சுமிநாராயணன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர் சங்கங்களை அவ்வப்போது அழைத்து பேசுவோம் எனவும், கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள். ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆனநிலையிலும் இதுவரை ஒருமுறை கூட அரசு ஊழியர் அமைப்புகளை அழைத்துப் பேசவில்லை.
அதேபோல், பலமுறை முயற்சி செய்தும் முதல்வரின் தனிச்செயலாளர், தலைமைச் செயலாளரையும் சந்திக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியாக தீர்வு காண வேண்டிய கோரிக்கைகள் நிறையவே உள்ளன. சங்கத் தலைவர்களை சந்தித்து பேசினால் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படும் எனவும் நம்புகிறோம்.
    அதேபோல், சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிப்படி புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், கருணை அடிப்படை பணிநியமன பிரச்னைகளுக்கு தீர்வு உருவாக்குதல், மருத்துவகாப்பீட்டு திட்ட குறைபாடுகளை களைதல், மத்திய அரசுக்கு இணையான படிகள் வழங்குதல், 50 சதவீத அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைத்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ம் தேதி தமிழகம் முழுவதும் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். அதேபோல், இம்மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT