தற்போதைய செய்திகள்

விருதுநகர் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா

விருதுநகரில் எம்.ஜி.ஆரின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் எம்.ஜி.ஆரின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விருதுநகரில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி விருதுநகர்-சாத்தூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட அவைத் தலைவரும், நகராட்சி உறுப்பினருமான ஐ.மருது தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இவ்விழாவில் நகராட்சி தலைவர் மா.சாந்தி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் மூக்கையா, நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன், நகர செயலாளரும், நகராட்சி உறுப்பினரும் ஆன முகமது நயினார், முன்னாள் மாவட்ட இளம் பாசறை செயலாளர் வெங்கடேஷ், ஐ.ஆர்.மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அதையடுத்து, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அனைவருக்கும் அதிமுகவினர் இனிப்புகளை வழங்கினார்கள். இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் முகமது நயினார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT