தற்போதைய செய்திகள்

திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

ஏலச்சீட்டு நடத்தி ரூ.58 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை பூலாங்குடி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை

சி.சண்முகவேல்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.58 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை பூலாங்குடி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நவல்பட்டு அருகேயுள்ள பூலாங்குடி காலனி, பாரத் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். ஓய்வுபெற்ற பெல் ஊழியர். இவரது மகன் காத்தமுத்து (35). இவர் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.58 லட்சம் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.ஆனால் ஒராண்டுகளாகியும் ஏலச்சீட்டில் சேர்ந்தவர்களுக்கு இதுவரை முதிர்வு தொகையையும், கட்டிய பணத்தையும் அவர் திருப்பி தராமல் இருந்துள்ளார். இது குறித்து ஏலச்சீட்டில் சேர்ந்தவர்கள் தங்கள் பணத்தை திருப்பி கேட்டபோது காத்தமுத்து கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலர் நடராஜன் தலைமையில் திரண்ட பாதிக்கப்பட்ட நபர்கள் 100 அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கோட்டாட்சியர் கணேசசங்கர்,வட்டாட்சியர் செந்தாமரை,திருவெறும்பூர் போலீஸôர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT