போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்றவர் கைது
கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு சனிக்கிழமை போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு சனிக்கிழமை போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூர் செல்லவதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை பிற்பகல் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியேற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
இதில் மதுரை மாவட்டம், கோவில்பட்டி,சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் அழகப்பன்(50), என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் சேது (50) என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து கோலாலம்பூர் செல்ல இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அழகப்பனை கைது செய்தனர்.