முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயேசு சிலை உடைப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயேசு சிலை உடைக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயேசு சிலை உடைப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயேசு சிலை உடைக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:00 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயேசு சிலை உடைக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு எதிரே சிறுமலையில் புகழ்பெற்ற மாதா கோவில் உள்ளது. இங்கு ஏராளமான ஆர்.சி. திருச்சபை மக்கள் சென்று வழிபாடு நடத்துவர்கள்.

இங்குள்ள இயேசு சொரூபத்தில் உள்ள கை உள்ளிட்ட பாகங்களும் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் மாதாவிடம் ஒரு சிறுவன் பாத்திரத்தில் ஏதோ வாங்குவது போன்றுள்ள சொரூபத்தில், சிறுவனை உடைத்து கீழே தள்ளியுள்ளார்கள். இதில் தலை சேதமுற்றது.

இது குறித்து ஆர்.சி. தேவாலயத்தின் முக்கிய நிர்வாகியான புனிதன் கூறுகையில், போலீஸார் இயேசு சிலையை உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இயேசு சிலை உடைப்புச் சம்பவம் குறித்து அறிந்ததும், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.முரளிதரன் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →