ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.1.50 கோடி மோசடி: தம்பதியினர் தலைமறைவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஏலச் சீட்டு நடத்தி தலைமறைவாக உள்ள தம்பதியினரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.1.50 கோடி மோசடி: தம்பதியினர் தலைமறைவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஏலச் சீட்டு நடத்தி தலைமறைவாக உள்ள தம்பதியினரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஏலச் சீட்டு நடத்தி தலைமறைவாக உள்ள தம்பதியினரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மயாண்டிபட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் குமரேசன் (41). இவர் இவரது மனைவி ராமலட்சுமி, இவரது சித்தி, சித்தப்பா மற்றும் தம்பி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெருவில் குடியிருந்து வந்த முத்துலட்சுமி மற்றும் அவரது கணவர் முருகேசன் ஆகியோரிடம் ஏலச்சீட்டு போட்டுள்ளார்கள். மொத்தம் ரூ.16.25 லட்சம் செலுத்தியிருந்துள்ளார்கள். இந்த சீட்டுகள் முடிவடைவதற்கு முன்பாக சீட்டு நடத்தி வந்த முருகேசன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் தலைமறைவாகிவிட்டார்களாம்.
13.11.2014- முதல் இவர்கள் குடியிருந்து வந்த வீடு பூட்டி கிடக்கிறது. தலைமறைவானவர்கள் இருக்கும் இடம் மல்லபுரம் தெருவில் உள்ள முத்துலட்சுமியின் உடன் பிறந்த சகோதரி முத்தம்மாள், தேனி மாவட்டம் சிக்குவார்பட்டியில் குடியிருக்கும் முத்துலட்சுமியின் மகள் காளீஸ்வரிக்கும் தெரியும் என்றும், பலரிடம் இவர்கள் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாயும் குமரேசன் புகார் மனு அளித்தார்.
இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ரூ.1.50 கோடி வரை மோசடி:
சீட்டு போட்டு ஏமாற்றம் அடைந்தவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்கு வந்து அலைந்து கொண்டுள்ளார்கள். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புதன்கிழமை கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் உள்ள பணியாளர் ரூ.7 லட்சம் வரையும், மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ரூ.6 லட்சம் வரையும் இவர்களிடம் சீட்டு கட்டியுள்ளார்கள். மேலும் இதுபோன்று சுமார் 65 க்கும் மேற்பட்டோர் இவர்களிடம் சீட்டு கட்டி ஏமாந்துள்ளார்கள். மாவட்ட காவல் துரித நடவடிக்கை எடுத்து, இவர்களது உறவினர்களை விசாரித்து, குற்றவாளிகளைக் கைது செய்து கட்டிய பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.