தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் அருகே மர்மக் காய்ச்சலுக்கு ராணுவ வீரர் மனைவி பலி

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ராணுவ வீரரின் மனைவி திருச்சி மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து,சுகாதாரத்துறையினர் தடுப்பு

கே.பி. அம்​பி​கா​பதி

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ராணுவ வீரரின் மனைவி திருச்சி மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து,சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

நாலுவேதபதி கிராமம்,நடுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரணியன் ராணுவ வீரர்.இவரது மனைவி ஜெயலெட்சுமி(25)8 மாத கர்ப்பிணி.அண்மைக்காலமாக வேளாங்கண்ணியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் 26-ம் தேதி காய்ச்சலுடன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து,நாகை மற்றும் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார்.

மே.30-ம் தேதி திருச்சியி்ல் உள்ள தனியார் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டு,அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து,திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு பெண் உயிரிழந்ததாக பரவிய தகவலால் அவரது சடலத்தை ஊருக்குள் கொண்டுவரக் கூடாது என தகவல் பரவியது. இதையடுத்து,சடலம் வீட்டுக்கு கொண்டுச்செல்லாமல் நேரிடையாக மயானத்துக்கு எடுத்துவந்து செவ்வாய்கிழமை நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டது.

தடுப்பு நடவடிக்கை:

நாலுவேதபதி கிராமத்தில் சுகாதார்துறை துணை இயக்குநர் சுரேஷ் ஆய்வு மேற்கொண்டார்.13 சுகாதார அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டு,தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT