முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோதல்: ஒருவர் காயம்: 5 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் 5 பேரைக் கைது

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோதல்: ஒருவர் காயம்: 5 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் 5 பேரைக் கைது

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் 5 பேரைக் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வ.புதுப்பட்டி, ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம் (எ) ராமச்சந்திரன் மகன் தமிழன் (19). இவரது அக்கா லாவண்யா இதே இடத்தைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் விக்னேஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். 31.5.15-ம் தேதி இருவரும் தலைமறைவாகிவிட்டார்கள். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இரு தரப்புக்கும் சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் லாவண்யா தனது காதலனுடன் செல்வதாகக் கூறி சென்றுவிட்டார். இதில் இரு தரப்பிற்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தமிழன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த இ.கேப்டன், இ.அந்தோணியார், ரா.சார்லஸ், அ.அமலச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து தமிழனை அடித்தார்களாம். மூ.புஷ்பராஜ், மூ.பீமராஜ், மூ.ஜூலி ஆகியோர் சேர்ந்து தமிழனின் சித்தியை மானபங்கம் செய்தார்களாம். மேலும் எங்களைப் பற்றி எதுவும் பேசக்கூடாது என்றும், பேசினால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டினார்களாம்.

இது குறித்து தமிழன், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கேப்டன், அந்தோணியார், சார்லஸ், ஜூலி ஆகியோரைக் கைது செய்தனர்.

மற்றொரு புகார்:

இதே இடத்தைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி ஜோல்சி (21) வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனு விவரம்:

ஜோல்சியும், ரா.டைசன் என்பவரின் தங்கை லாவண்யாவும் ஒன்றாகப் படித்தவர்கள். 31.5.15 முதல் லாவண்யாவைக் காணவில்லை.  வியாழக்கிழமை நீதிமன்றத்தில் லாவண்யா ஆஜராகி, பெற்றோருடன் செல்ல விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு,  காதலித்தவருடன் செல்வதாகக் கூறி அவருடன் சென்றுவிட்டார்.

இந்த முன்விரோதத்தில் ஜோல்சி, வியாழக்கிழமை இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, ரா.டைசன், பிரகாஷ், கா.ஜஸ்டீன் ஆகியோர் சேர்ந்து ஜோல்சியை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து ஜோல்சி, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →