மிகப்பெரிய ஆபத்து வரும்போது சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும்: சைலேந்திரபாபு
மிகப்பெரிய ஆபத்து வரும்போது, சூரியனைப் போன்று பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் தலைமைப் பண்பு. மிகப் பெரிய கலவரத்திலும் அமைதியாய் இருப்பவர்கள் ஆபத்தை முன்பே தெரிந்து கொள்வார்கள் என்று தமிழக கடலோர எல்லை பாதுகாப்பு காவல் துணைத் தலைவர் சி.சைலேந்திரபாபு கூறினார்.
தற்போதைய செய்திகள்மிகப்பெரிய ஆபத்து வரும்போது சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும்: சைலேந்திரபாபு
மிகப்பெரிய ஆபத்து வரும்போது, சூரியனைப் போன்று பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் தலைமைப் பண்பு. மிகப் பெரிய கலவரத்திலும் அமைதியாய் இருப்பவர்கள் ஆபத்தை முன்பே தெரிந்து கொள்வார்கள் என்று தமிழக கடலோர எல்லை பாதுகாப்பு காவல் துணைத் தலைவர் சி.சைலேந்திரபாபு கூறினார்.
மிகப்பெரிய ஆபத்து வரும்போது, சூரியனைப் போன்று பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் தலைமைப் பண்பு. மிகப் பெரிய கலவரத்திலும் அமைதியாய் இருப்பவர்கள் ஆபத்தை முன்பே தெரிந்து கொள்வார்கள் என்று தமிழக கடலோர எல்லை பாதுகாப்பு காவல் துணைத் தலைவர் சி.சைலேந்திரபாபு கூறினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக். 32-வது அணி மாணவர்களுக்கான 6 புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார். துணை வேந்தர் டாக்டர் ச.சரவணசங்கர் வாழ்த்துரை வழங்கி, பேராசிரியர்களை அறிமுகம் செய்து வைத்து, பல்கலைக்கழக விடுதி, ஒழுக்கம், சட்ட திட்டங்கள் குறித்து விளக்கினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பயத்தையும், அழுத்தத்தையும் பிள்ளைகளுக்கு தரக்கூடாது. அறிவையும், நம்பிக்கையையும், துணிவையும் தருவதற்கு முயற்சிக்க வேண்டும். பிள்ளைகள் இந்த மூன்றையும் பெற்றால் உலகில் எங்கு சென்றாவும் எதிலும் வெற்றி பெறுவார்கள் என்றார் அவர்.தமிழக கடலோர எல்லை பாதுகாப்பு காவல் துணைத் தலைவர் சி.சைலேந்திரபாபு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நல்ல கதாநாயகன் ஆவதற்கு தலைமைப் பண்புடன் விளங்க வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் உங்களை நேசிக்க வேண்டும். உங்களது சாதனைகளால் பலர் உங்களுடைய ரசிகனாக வேண்டும். பெற்றோர் கஷ்டப்பட்டு உழைத்தப் பணத்தை கட்டி உங்களை பல்கலைக்கழகத்தில் சேர்த்து அவர்களது கடமையை முடித்துவிட்டார்கள். இனிமேல் மாணவர்களும் ஆசிரியர்களும் தம் கடமையகளைச் செய்ய வேண்டும்.
மாணவர்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். ஒரு மணி நேரம் செய்தித் தாள் வாசிக்க வேண்டும். ஒரு மணி நேரம் கணினி தொடர்பான புத்தகங்களைப் படிக்க வேண்டும். ஒரு மணி நேரம் கணினி தொடர்பில்லாத மற்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஓட்டப் பயிற்சி செய்ய வேண்டும். இவை மாணவர்களின் வெற்றிக்கு வழியாகும் என்றார் அவர். வாழ்க்கை மிகவும் கடினமானது. அயராது உழைத்தால் வாழ்க்கை பல வெற்றிகளை உங்களுக்குத் தரும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளிகிருஷ்ணன், திட்டத் துறை டீன் சுந்தர், துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.