ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியை தண்ணீரில் அழுத்திக் கொலை செய்த கணவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை நீர் உள்ள தண்ணீர் டிரம்பில் தலையை அமுக்கி கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியை தண்ணீரில் அழுத்திக் கொலை செய்த கணவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை நீர் உள்ள தண்ணீர் டிரம்பில் தலையை அமுக்கி கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை நீர் உள்ள தண்ணீர் டிரம்பில் தலையை அமுக்கி கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலைச் சேர்ந்தவர் கண்ணன். மாட்டு தரகர். இவரது மனைவி சுந்தரலட்சுமி (32). இவர் எம்.ஏ., பி.எட்., படித்தவர். இவர்களுக்கு ஹரிஹரன் (7), ஸ்ரீலேகா (3) என்ற இரு குழந்தைகள் உண்டு. கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு நடக்குமாம்.
திங்கள்கிழமை இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம், நீங்கள் தேவையில்லாதவர்கள் வீட்டிற்கொல்லாம் செல்கிறீர்கள் என்று கூறி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமுற்ற கண்ணன், வீட்டில் உள்ள தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த டிரம்மில் சுந்தரலட்சுமியின் தலையை அழுத்தி கொலை செய்துள்ளார்.
இது குறித்து அறிந்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் செவ்வாய்கிழமை, சம்பவ இடத்திற்குச் சென்று சுந்தரலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்ணனைக் கைது செய்தனர்.