அம்பை அருகே கோயில் விழாவில் மோதல்: இளைஞர் மீது தாக்குதல், மறியல்
அம்பாசமுத்திரம் அருகே கோயில் கொடை விழாவில் பங்கேற்ற இளைஞரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதையொடுத்து இரு பிரிவினரிடையே மோதல் உருவானது. இதில் வீடுகள், கார்,
அம்பாசமுத்திரம் அருகே கோயில் கொடை விழாவில் பங்கேற்ற இளைஞரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதையொடுத்து இரு பிரிவினரிடையே மோதல் உருவானது. இதில் வீடுகள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியன உடைத்து சேதப்படுத்தப்பட்டன. சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அம்பாசமுத்திரம் அருகே கோவில்குளம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை கோயில் கொடை விழா நடைபெற்றது. இதில் மன்னார்கோவில் வெயிலான் தெருவை சேர்ந்த பொன்னையா மகன் பசுபதி (20) உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனராம். இரவில் கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அப்போது பசுபதியை என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு பிரிவினர் இடையே மோதல் உருவானது. அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள், கார் ஆகியன உடைத்து சேதப்படுத்தப்பட்டது. பசுபதியை தாக்கியதை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்குள்ள வீடுகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து கோவில்குளம், மன்னார்கோவிலில் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். காயமடைந்த பசுபதி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புதன்கிழமை பசுபதியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெயிலான்தெரு மக்கள் அங்கு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இது குறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.